மெக்ஸிக்கோ எல்லையில் அகதிகளாக தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு பேருந்தில் தற்காலிக வகுப்பறை அமைத்து பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் மெக்ஸிக்கோவிலிருந்து பிழைப்பு தேடி அமெரிக்காவுக்கு புலம் பெயர நினைக்கும் அகதிகள், மெக்ஸிக்கோ- அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

மேலும் வீடுகளற்று தவிக்கும் அவர்களை அதிகாரிகள், அருகே தற்காலிக கூடாரங்களில் தங்கவைத்து வருகின்றனர். இந்நிலையில், பெற்றோரின் இந்த புலம்பெயரும் முயற்சியால், முறையே கல்வி பயில முடியாமல் தவிக்கும் சிறுவர்களை ஒன்றிணைத்து அமெரிக்க நடிகை எஸ்டிஃபானியா ரிபெல்லான் கல்வி கற்றுக்கொடுத்து வருகிறார்.

இதற்கென தனது பேருந்தை தற்காலிக வகுப்பறையாக மாற்றி, ‘YES WE CAN’ என்ற பெயரில் வகுப்பு நடத்தி வருகிறார். இதில் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட ஏராளமான மாணவர்களுக்கு, இரு மொழிகளில் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.