தீரன் பட புகழ் வினோத் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படம் பெண்களை மையப்படுத்திய படம்.

இப்படம் வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என நிறைய செய்திகள் வந்தன.

ஆனால் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.