இலங்கையில் மாற்று திறனாளிகளிற்கான மாதாந்த கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை மாற்றுத்திறனாளிகளிற்கான மாதாந்த கொடுப்பனவாக 2ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தில், அது 5ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்படி, யூலை முதலாம்; திகதியில் இருந்து கொடுப்பனவு 5ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.