அம்பாந்தோட்டை- சூரியவௌவில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச துடுப்பாட்ட மைதானத்தை, இந்தியாவும் இலங்கையும் இணைந்து தனியார் அரசபங்குடைமையாக அபிவிருத்தி செய்யவுள்ளது என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சூரியவௌ துடுப்பாட்ட மைதானம் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது,
இந்த நிலையிலேயே இலங்கை தற்போது இதனை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, கதிர்காமம், வெள்ளவாய, அம்பாந்தோட்டை பகுதிகளில் விடுதிகளும் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.