அரபு நாடுகளில் நேர்கொண்ட பார்வை படம் செம வசூலை குவித்துள்ளது. அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இந்த படம் அமைந்துவிட்டது. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகின்றது.

அஜித் படங்களுக்கு எப்போதும் அரபு நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும், அந்த வகையில் நேர்கொண்ட பார்வை தற்போது வரை மொத்தம் அங்கு ரூ.7 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதற்கு முன் வந்த விஸ்வாசம் ரூ.10 கோடி வரை அரபு நாடுகளில் வசூல் செய்திருந்தாலும், கமர்ஷியல் அல்லாத ஒரு படம் இத்தனை கோடி வசூல் செய்தது கண்டிப்பாக பெரிய விஷயம் தான் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.