இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலம் நீடிப்பதற்கான, சிறப்பு அரசிதழ் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, பாதுகாப்பு படைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில்,மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

30 நாள்களுடன் இந்த அவசரகாலச்சட்டம் முடிவடைகின்ற நிலையில், அதனை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.