ஆடை அணியாமல் விமானத்தில் பயணம் செய்ய அடம்பிடித்த நபர்;அவர் கூறிய அதிர்ச்சிக் காரணம்!

இப்போதெல்லாம் பிரபலமாக எதைச் வேண்டும் என்கின்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இன்ஸ்ட்டாகிராமில் சலஞ்ச் செய்வது, வித்தியாசமாக போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடுவது, என எதையாவது செய்வது இதையே வேலையாகவே போய்விட்டது.

38 வயதான இந்த ஆண் மாஸ்கோவில் உள்ள டோமோதெடோவோ விமான நிலையத்தில் விமான பயணம் மேற்கொள்ள சென்றார். முதலில் செக் அப் செய்ய போகும் போதெல்லாம் ஆடையுடன் தான் சென்றுள்ளார். உள்ளே சென்றதும் அவர் வேலையை காட்ட தொடங்கி விட்டார். உடம்பில் இருக்கிற ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டி கொண்டே விமானத்தை நோக்கி ஓட ஆரம்பித்து உள்ளார்.

இந்த மாதிரி கிறுக்குத்தனமாக செய்த அவரை பிடித்து விமான நிலைய போலிஸாரும் விசாரித்து உள்ளனர். இத்தனைக்கும் அப்போது அவர் குடிபோதையிலும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அன்று முழுவதும் இது தான் பரபரப்பு செய்தியாக ஒளிபரப்பப்பட்டு உள்ளது.

பிறந்த மேனியில் இருந்த அவரை உடனே போலிஸார் சுற்றி வளைத்து விட்டனர். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு பிறந்த மேனியாக விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை என்று வேடிக்கையான பதிலை கூறியுள்ளார்.

எல்லோர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றும் எல்லாரும் தன்னைப்பற்றி பேச வேண்டும் என்றும் நான் இந்த முடிவை எடுத்தேன் அவர் கூறியுள்ளார். பிறந்த மேனியில் ஏரோடைனமிக் அனுபவம் எப்படி இருக்கும் என்று பார்க்க தோன்றி யது என்றும் ஒரு வித்தியாசமான பதிலை அவர் கூறியுள்ளார்.