விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருவார். அந்த வகையில் இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார், இப்படம் ஆஸ்திரேலியாவில் ஒரு விருது விழாவில் திரையிடப்பட்டது.

இப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது, இதன் மூலம் அவருடைய ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.