இக்கட்டான நேரத்தில் சிறுநீரை அடக்கும் முறைகள் எவை?

நம்முடைய அன்றாட நிகழ்வுகளின் போது சில குறிப்பிட்ட தருணங்கள் நமக்கு சில சமயங்களில் தர்ம சங்கடங்களை ஏற்படுத்தும். அதில் மிக முக்கியமான ஒரு விஷயம் சிறுநீர் முட்டிக்கொண்டு வருவது. ஏனென்றால் எல்லா நேரங்களிலும் நம்முடைய சிறுநீர் முட்டிக் கொண்டு வருவதை நம்மாலேயே அடக்கிக் கொள்ள முடியாது.

எங்காவது பயணங்களில் செல்லுகின்ற பொழுது, அவசரமாக வரும் பொழுது கழிப்பிடம் அருகில் இல்லாமல் போனால், டிரபிக்கில் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய முடியும். ஒன்றுமே செய்ய முடியாது. வேறு எதுவும் செய்ய வேண்டும். உடனே ஒரு குட்டி டான்ஸ் ஆடுங்கள். முட்டிக் கொண்டு வந்தாலும் கூட நின்றுவிடும்.

நெளிவது எப்போதாவது வெளியில் இருக்கின்ற பொழுது, அவசரமாக வெளியேறத் துடிக்கின்ற சிறுநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், பொதுவாக நாம் எல்லோரும் என்ன செய்வோம். கால்களை கிராஸாக வைத்துக் கொண்டு, நெளிந்து கொண்டே நடந்து கொண்டு இருப்போம். எங்காவது சிறுநீர் கழிப்பதற்கான இடம் கிடைக்கும் வரை அப்படிதான் நெளிந்து கொண்டு இருப்போம்.

அதேபோல இரண்டு கால்களையும் நெருக்கி வைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தாலும் கொஞ்சம் சிறுநீரை அடக்கிக் கொள்ள முடியும். என்னது? மூத்திரம் முட்டிக் கொண்டு வரும்போது டான்ஸ் ஆடணுமா? என்று கேட்பவர்களுக்கு கோவம் வரும்தான். அது பார்ப்பதற்கு கொஞ்சம் அருவருப்பாக தான் இருக்கும்.

சிறுநீர் கழித்தல் என்பது இயற்கையாக உண்டாகக்கூடிய ஒரு செயல்பாடு தான். சிறுநீரகங்களில் ஏற்படும் சுருங்கி விரியும் தன்மையினால் நம்முடைய உடலுக்கு இருக்கின்ற தேவையில்லாத நச்சுக்கள் மற்றும் கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றுகின்ற ஒருவகை வடிவமாக தான் சிறுநீர் இருக்கிறது. அதனால் நம்முடைய உடலின் மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று தான் இந்த சிறுநீர் கழித்தல் என்பது. அதனால் உங்களால் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அதை கட்டுப்படுத்த இயலாது.

ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை சிறுநீர் கழிப்பது மிகவும் நல்லது. ஆறு முறை என்பது சாதாரணமாக நாம் சிறுநீர் கழிக்கக்கூடிய அளவு. இதுவே நீங்கள் வழக்கத்தை விட கொஞ்சம் தண்ணீர் கூடுதலாகக் குடிக்க ஆரம்பித்தால், அது எட்டு முறையாக மாற வாய்ப்புண்டு. சிலருக்கு பத்து முறை கூட செல்ல வாய்ப்புண்டு. குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாக இருக்கும்.

சிறுநீர் அடக்குதல் சிறுநீரை அடக்க நினைப்பது ஒரு குறிப்பிட்ட நேரம் வரையிலும் சரியானதாக இருக்கும். அதாவது நாம் செல்கின்ற இடத்தில், நமக்கு ஒரு சுகாதாரமான கழிப்பிடம் கிடைக்கும் வரையில் அதை கட்டாயப்படுத்தி அடக்கி்க் கொள்ள முயற்சி செய்கிறோம். அந்த சமயங்களில் ஒரு குட்டி நடனத்தைப் போடுங்கள். இப்படியொரு சூழ்நிலையில் எப்படி நடனம் ஆட முடியும் என்று நீங்கள் கேட்கலாம். நடனம் ஆடும் மூட் இது இல்லைதான் என்றாலும்கூட, நிபுணர்கள் இந்த சூழ்நிலையில் நடனம் ஆடினால் இன்னும் கொஞ்சம் நேரம் சிறுநீரை அடக்கிக் கொள்ள முடியும் என்கிறார்கள். அதற்கு அவர்கள் இரண்டு வகையான காரணங்களைச் சொல்கிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம்.

நகம் கடித்தல் சில சூழ்நிலைகளில் நம்முடைய நடத்தைகளில் சில வித்தியாசமான மாற்றங்கள் உண்டாவதை நாம் பார்த்திருப்போம். ஏதேனும் சிக்கலான காலகட்டத்தின் போது, பெருந்துன்பத்தின் போதும், தலையை சொரிந்து கொள்வதும், நகத்தைக் கடிப்பதும் செய்வோம். அதுவும் ஒருவகையான ஸ்டிரஸ் பஸ்டர் தான். அதுபோல ஒரு சூழல்தான் இந்த போகமுடியாத வேளையில் சிறுநீர் முட்டிக் கொண்டு வருவது

குட்டி நடனம் இரண்டாவது காரணம், நடனம் ஒன்பது ஒரு விஷயத்திலிருந்து நம்முடைய கவனத்தை திசைதிருப்ப உதவும். எப்போதும் சிறுநர் வருவதையே யோசித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய மூளையை மடைமாற்றி நடனத்தின் பக்கம் திருப்பி வைக்கும்.

சுக அனுபவம் ஆனால் என்ன தான் மாற்று வழிகளை யோசித்தாலும் சிறுநீர் கழித்த பின்பு தான் நிறைய பேருக்கு மனதில் நிம்மதிப் பெருமூச்சே வரும். அடக்கி வைத்திருந்த அத்தனையையும் இறக்கி வைத்துவிட்ட பிறகு, அப்பாடா என்று சொல்லும் சுகம் இருக்கிறதே அதைவிட வேறென்ன சுகம் இருக்கிறது. அதனால் முடிந்தவரை அடக்கி வைத்திருக்காமல் வெளியேற்றுங்கள். அல்லது வேறு வழியில்லாத போது ஒரு குட்டி நடனத்தைப் போடுங்கள்.