வனவிலங்குகள் குறித்த பெண் செய்தியாளரும், உயிரியல் வல்லுநருமான லிசி டேலி என்பவர் மனிதர்கள் அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும் ஜெலி மீனை தத்ரூபமாக படம் பிடித்துள்ளார்.

பி.பி.சி செய்தி நிறுவனத்தின் வனவிலங்குகள் குறித்த பெண் செய்தியாளரும், உயிரியல் வல்லுநருமான லிசி டேலி என்பவர் இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு கடற்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். லிசி டேலி, கடலுக்கு அடியில் நீந்தி கொண்டிருந்த போது ஆளுயர ஜெலி மீன் ஒன்று அவரை கடந்து சென்றது. லிசி டேலியுடன் சென்றிருந்த ஒளிப்பதிவாளர் அதனை தத்ரூபமாக படம் பிடித்தார்.

பொதுவாக ஜெலி மீன்கள் ஒரு மீட்டர் நீளம் மற்றும் 25 கிலோ எடை வரை மட்டுமே வளரும் தன்மை கொண்டவை என வனவிலங்கு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மனிதர்கள் அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும் ஜெலி மீனின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.