இணையத்தில் லீக் ஆகியதா கலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்?

சாம்சங் கலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சாம்சங் சமீபத்தில் தனது கலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக சாம்சங் கலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை தற்போதைய டிரெண்டிங் அம்சங்களுடன் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வரிசையில் தற்சமயம் கலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியிருக்கிறது. அதன்படி கலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் TOF ரக கேமரா மற்றும் 25 வாட் பி.டி.  பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது. இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் கலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனில் பிரத்யேக  வடிவமைப்பு கொண்டிருக்கும்  என கூறப்படுகிறது.