இணையத்தில் வெளியாகியது பிரமிக்க வைக்கும் டிஸ்பிளே கொண்ட சம்சுங் A8s ஸ்மார்ட் போன்

சம்சுங் நிறுவனத்தின் கலக்ஸி A8s ஸ்மார்ட்போனின் விவரங்கள் அமெரிக்காவின் எப்.சி.சி. (FCC) வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் கிடைத்திருக்கும் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 19:5:9 ரக டிஸ்ப்ளே மற்றும் போனின் இடது புற ஒரமாக டிஸ்ப்ளேவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க வலைதளத்தில் SM-G8870 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது சம்சுங் ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங் வசதி (5V-2A/9V-1.67A) வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதே போன்ற வசதி சம்சுங் நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கி இருக்கிறது.

சம்சுங் கலக்ஸி A8s எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
– 10 எம்.பி. 120° அல்ட்ரா வைடு பிரைமரி லென்ஸ்
– 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, என்.எஃப்.சி
– 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

சம்சுங் நிறுவனம் தனது கலக்ஸி A8sஏ8எஸ் ஸ்மார்ட்போனினை இம்மாதம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் வரும் வாரங்களில் தெரியவரும்.

error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது