இந்த இரண்டு ராசிக்காரர்களும் இன்று கவனமாக இருந்து கொள்ளுங்கள்!

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்

மேஷம்
நீங்கள் செய்கின்ற செயல்களில் கொஞ்சம் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. உங்களுடைய பயணத் திட்டங்களில் கொஞ்சம் கால தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களுடைய பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடாமல் இருப்பது தான் நல்லது. உங்களுடைய வாகனங்களில் செல்லுகின்ற பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். வியாபாரங்களில் சின்ன சின்ன மாற்றங்களைச் செய்வீர்கள். முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்கள் சொல்கின்ற விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
தொழில் மற்றும் வியாபார ரீதியாக வெளியிடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்கின்றவர்களுக்கு போகிற காரியம் வெற்றியில் வந்து முடியும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். சுப காரியங்களைத் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களும் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டில் அன்பும் மகிழ்ச்சியும் பெருகும். புதிய நண்பர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டில் இருப்பவர்குளுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். முக்கியமாக ஏதேனும் முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தால் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. இதுவரையில் கைக்கு வந்து சேராத பழைய பாக்கிகள் அனைத்தும் வந்து சேருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தக்க இடமாறுதலை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். எந்த காரியத்தைச் செய்தாலும் அதில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்
வீட்டில் உள்ளகுழந்தைகளுடன் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இதுவரையிலும் தடைபட்டுக் கொண்டே இருந்த வேலைகளை முக்கிய சில அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். நீங்கிய விரும்பிய பொருள்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலமும் நிறமும் இருக்கும்.

சிம்மம்
நீங்கள் உணர்ச்சிவசப் படாமல் கொஞ்சம் விவேகத்துடன் நடந்து கொள்வது மிக அவசியமான ஒன்று. உங்களுடைய குடும்பத்தினருடன் நீங்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களுடைய உறவினர்களின் வருகையினால் உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய உத்தியோகம் சம்பந்தப்பட்ட சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய வியாபாரத்தில் புதிதாக வாடிக்கையாளர்களால் உங்களுடைய லாபங்கள் அதிகரிக்கும். உங்களுடைய வியாபாரத்தில் இதுவரையிலும் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த வாய்ப்புகள் மீண்டும் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
நீங்கள் நினைத்து வைத்திருந்த நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு இன்று நிறைவேறும். உங்களுடைய அளவுக்கு அதிகமான செலவுகளைக் குறைக்க விரும்புவீர்கள்இ உத்தியோகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். எதிலும் பிடிவாதமாக இருக்கும் நீங்கள் உங்களுடைய பிடிவாதத்தைப் புரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ள விரும்புவீர்கள். புதிதாகச் செய்ய வேண்டிய தொழில் முயற்சிகளை வெற்றிபரமாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுக்குப் பிடித்த இடத்தில் சென்று மன ஆறுதல் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்
வெளியூருக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும். நண்பர்களுக்கு இடையில் உங்கடைய மதிப்பும் புகழும் உயரும். பரம்பரை சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நலல் சிறந்த தீர்வு கிடைக்கும். வாகன வசதிகள் உங்களுக்கு அதிகரிக்கும். உங்களுடைய உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதாயங்கள் உண்டாகும். இதுவரையில் நிலுவையில் இருந்து வந்த பண வரவுகள் அனைத்தும் உங்களுடைய கைக்கு வந்து சேரும். இதுவரையில் இருந்து வந்த பழைய கடன் பிரச்சினைகள் மூலம் இருந்து வந்த இன்னல்கள் தீர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் உங்கள் மீதான நன்மிக்கையும் மதிப்பும் உயர ஆரம்பிக்கும். உங்களுடைய வியாபாரம் சம்பந்தப்பட்ட பிரபலங்களைச் சந்திக்கும் உங்களுக்கு வாய்ப்பு உண்டு. அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இதுவரையிலும் இருந்து வந்த இழுபறி நிலைகள் நீங்கும். உங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உங்களுடைய வியாபாரங்களில் நீங்கள் நினைத்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு
நீங்கள் தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகளைச் சமாளிப்பீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணிகளை விரைந்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வீட்டின் சூழல்களைப் புரிந்து நடந்து கொள்வீர்கள். வீட்டில் கணவ்ன மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து முரண்பாடுகள் வந்து போகும். புண்ணிய காரியங்களை முன்நின்று நடத்துவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்
இதுவரை நீங்கள் வாங்க வேண்டுமென் எண்ணிக் கொண்டிருந்த விலையுயர்ந்த பொருளை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் உங்களுக்கு வந்து சேரும். மனதுக்குள் நினைத்த செயல்களை எப்படியேனும் அலைந்து திரிந்து செய்ய வேண்டிய சூழல்க்ள உங்களுக்கு உண்டாகும். வியாபாரத்தில் சற்று மந்தநிலையே உண்டாகும். உங்களுடைய பணியில் முக்கியமான ஆவணங்களைக் கையாளுகிற பொழுது எச்சரிக்கையுடன் நடநது கொள்ள வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
குடும்பத்தின் வருமானம் கொஞ்சம் மந்தமாக இருக்கிற பொழுது, குடும்ப வருமானத்தைப் பெருக்க புதிதாக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் சுற்றம் அக்கம் பக்கதாரின் ஆதரவுகள் உங்களுக்குப் பெருகும். உங்களுடைய நண்பர்களின் மூலமாக உங்களுக்குப் பெரும் ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிதாக சில வாடிக்கையாளர்கள் அறிமுகங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய கனிவானப் பேச்சின் காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
முக்கிய பிரபலங்களுடைய அறிமுகங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் உங்களுக்கு அதிகரிக்கத் தொடங்கும். வீடு மற்றும் வாகனங்களைப் பராமரிப்பதற்கான செலவுகள் உங்களுக்கு ஏற்படும். மனதுக்குப் பிடித்த கலைப்பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் எதிர்பார்த்த பயிணிட மாற்றம் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புகள் கூடிக்கொண்டே போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.