அப்பிள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தனது ஐமேக் கணனிகளை சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கிரபிக்ஸ் உடன் அப்டேட் செய்திருக்கிறது.

21.5 இன்ச் ஐமேக் மாடலில் 8-ம் தலைமுறை குவாட்-கோர் 6-கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஐமேக் மாடல்களை விட 60 சதவிகிதம் வேகமாக இயங்கும். 27 இன்ச் ஐமேக் மாடலில் 9-ம் தலைமுறை 6-கோர் மற்றும் 8-கோர் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது.

இத்துடன் 21.5 இன்ச் ஐமேக் மாடலில் ரேடியான் ப்ரோ வீகா 48 கிரபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது 80 சதவிகிதம் வேகமான கிரபிக்ஸ் வழங்குகிறது. 27-இன்ச் ஐமேக் மற்றும் ரேடியான் ப்ரோ வீகா கிரபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 50% வேகமாக இயங்குகிறது.

27-இன்ச் ரெட்டினா 5K ஐமேக் மற்றும் 21.5 இன்ச் ரெட்டினா 4K ஐமேக் மாடல்களில் 500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் வைடு கலர் (P3) வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 21.5 இன்ச் ஐமேக் மற்றும் ரெட்டினா 4K டிஸ்ப்ளே மாடல் விலை ரூ.1,19,900 என்றும் புதிய 27-இன்ச் ஐமேக் மற்றும் ரெட்டினா 5K டிஸ்ப்ளே மாடல் விலை ரூ.1,69,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.