இளம்பெண்ணுடன் சென்ற நடுத்தர வயதுக்காரர் அடித்துக்கொலை- கொழும்பில் பயங்கரம்!

இளம் பெண்ணுடன் நடுத்தர வயதுக்காரர் சென்றபோது, சில இளைஞர்கள் கேலி செய்தது உயிரிழப்பு வரை சென்றுள்ளது.

இன்று நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது.

கொள்ளுப்பிட்டி, முத்தையா வீதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் நடந்த இந்த விவகாரத்தில் 47 வயதானவர் அடித்துக் கொல்லப்பட்டார். அழகுக்கலை நிலையமொன்றின் உரிமையாளரே உயிரிழந்தார்.

இளம்பெண்ணுடன் அவர் முச்சக்கர வண்டியில் சென்று இறங்கியபோது, அங்கிருந்த இளைஞர்கள் ஐவர் அவரை கேலி செய்தனர். இதனால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, அவர் கடுமையாக தாக்கப்பட்டவர்.

படுகாயமடைந்தவர் கொள்ளுப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அங்கு உயிரிழந்தார்.

சந்தேகநபர்கள் ஐவர் கைதாகினர். 18 வயது முதல் 24 வயது வரையுள்ளவர்களே கைதாகினர். யூனியன் பிளேஸ், போல்கசோவிட மற்றும் கண்டி பகுதியை சேர்ந்தவர்களே கைதாகினர்.