ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஐவர் டுபாயிலிருந்து அழைத்துவரப்பட்டனர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உள்பட ஐந்து பேர் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஐவரையும் நேற்றிரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடப் பிரிவு அறிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.