உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை ஆதரித்துப் பேசினார் என்ற குற்றச்சாட்டில் மௌலவி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் பள்ளிவாசல் மௌலவியான மொகைதீன் முனாஜித் என்பவரே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

அவர், சவுதி அரேபியாவுக்குச் சென்று நாடு திரும்பிய நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் அவர் ஆதரித்துப் பேசினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இஸ்லாம் கூறுவது போன்று அநீதி இழைத்தவர்களை அழிப்பது பொருத்தமானது என அவர் தனது முகநூலில் காணொலிப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.