உலகக் கிண்ண ஹொக்கி – ஆரம்ப விழா ரிக்கெட் விற்பனை நாளை ஆரம்பம்

ஒரிசாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஹாக்கி தொடரின் துவக்க விழாவிற்கான ஒன்லைன் ரிக்கெட் விற்பனை நாளை ஆரம்பமாகவுள்ளது.

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆண்களுக்கான உலகக் கிண்ண ஹொக்கி தொடர் வரும் 28ஆம் திகதி முதல் டிசெம்பர் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன.

புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 27ஆம் திகதி தொடக்க விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. கட்டாக்கில் உள்ள பாரபட்டி ஸ்டேடியத்தில் உலகக்கிண்ண கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஷாரூக் கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், துவக்க விழாவிற்கான ஒன்லைன் ரிக்கெட் விற்பனை நாளை ஆரம்பமாகும் என ஹொக்கி இந்தியா அறிவித்துள்ளது.

துவக்க விழாவிற்கு சுமார் 10ஆயிரத்து 500 ரிக்கெட்டுகளும், மறுநாள் நடைபெறும் உலகக் கிண்ணக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு 30 ஆயிரம் டிக்கெட்டுகளும் விற்பனை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.