இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டி தாய்லாந்தில் இடம்பெற்று வருகிறது.

இப்போட்டியில் ஆடவருக்கான 100 கிலோ கிராம் எடை பிரிவிலேயே இவர் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

சுமார் 50 வருட வரலாற்றைக் கொண்ட ஆசிய ஆணகழகன் போட்டித் தொடரில் இலங்கைக்கு முதலாவது சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த ஆணழகனாக இலங்கையைச் சேர்ந்த லூசன் புஷ்பராஜ் மகுடம் சூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குவைத் நாட்டில் (Iron Man Gym) நிறுவனத்தின் பயிற்சியாளராகக் கடமையாற்றுகின்ற லூசன், 2013ஆம் ஆண்டு கோல்டன் ஸ்ரீலங்கா ஆணழகனாகவும், அதே ஆண்டு  100கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் இலங்கையின் ஆணழகனாகவும்தெரிவானார்.

அதன்பிறகு 2006ஆம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற Wawon Classik போட்டித் தொடரில்வெண்கலப் பதக்கத்தை வென்ற அவர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியஆணழகன் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.