ஒரு மணல்மேட்டின் கீழ் இந்தக் கல்லறை புதைந்து கிடந்தது. எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட, சுமார் 4,400 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மதகுரு ஒருவரின் கல்லறையில் அகழ்வாராய்ச்சியாளர்கள் இன்று முதல் அகழ்வாய்வைத் தொடங்குகின்றனர்.

‘வாய்த்தே’ எனும் அந்த மதகுருவின் கல்லறையில் அவரது தாய், மனைவி மற்றும் பிற உறவினர்களும் புதைக்கப்பட்டுள்ளனர்.

அழகிய பழங்கால ஓவியங்களும், பாரோ மன்னர்களின் சிலையும் அந்த மிகப்பெரிய கல்லறையின் உட்புறத்தில் நிறுவப்பட்டுள்ளன.