தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ரிஷாத் பதியூதினை கொலை செய்யும் திட்டம் தொடர்பாக நாமல் குமார வெளியிட்ட குரல் பதிவு அதுதொடர்பில் அண்மையில் அகில இலங்கை மக்கள் சார்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ரிஷாத் பதியுதீன் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்,

தன்னை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ள நிலையிலும் தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளன என நாடாமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.

தற்போது பாதூகப்பு அமைச்சராக ஜனாதிபதியே உள்ளார் எனவும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்று ரிஷாத் பதியுதீன் இதன்போது தெரிவித்துள்ளார்.

error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது