கப்டன் பதவியில் விராட் கோக்லி இன்னும் ‘அப்ரன்டிஸ்’-தான் என கவுதம் கம்பிர், மீண்டும் அவரது திறமை குறித்து சாடியுள்ளார்.

ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன், ஆர்.சி.பி.-யில் தொடர்ந்து கப்டனாக இருந்து வரும் விராட் கோக்லி ஒருமுறை கூட சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றவில்லை. டோனி, ரோகித் சர்மா தலா மூன்று முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அவர்களுடன் விராட் கோக்லியை ஒப்பிட இயலாது. இன்னும் கப்டன் திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுவரை அவரை ஆர்.சி.பி. கப்டனாக வைத்திருப்பதால், அவர் அணிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கவுதம் கம்பிர் கூறியிருந்தார். இது பற்றி விராட் கோக்லியிடம் கேட்டபோது, ”வெளியில் உள்ள நபர்கள் கூறியதை கருத்தில் கொண்டால், நான் வீட்டில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்றார்.

இந்த சீசனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஐந்து போட்டிகளிலும் ஆர்.சி.பி. தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இந்தநிலையில் கப்டன் பதவியில் விராட் கோக்லி இன்னும் ‘அப்ரன்டிஸ்’தான் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவுதம் கம்பிர் கூறுகையில், கப்டன் பதவியில் அவர் அப்ரன்டிஸ். அவர் இன்னும் ஏராளமாக கற்றுக்கொள்ள வேண்டும். பந்து வீச்சாளர்கள் மீது சாடுவதை விட்டுவிட்டு, தோல்விக்கு காரணத்தை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.