ஓடும் ரெயினில் ரிஸ்கான முத்தம்: வைரலாகும் புகைப்படம்!

கடந்த சில ஆண்டுகளாக செல்பி மோகத்தால், ரிஸ்க்கான செல்பிகள் உள்பட பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் காதல் ஜோடி ஒன்று ஒடும் ரெயிலில் ரிஸ்க்கான முத்தம் கொடுத்தவாறு எடுத்த புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரயிலில் ஒரு கையை மட்டும் கம்பியில் பிடித்தவாறு நின்றிருக்கும் காதலன் மீது சாய்ந்தவாறு காதலி கொடுக்கும் முத்தத்தை ஒருவர் புகைப்படம் எடுத்து வைரலாக்கியுள்ளார். அதிலும் ரயில் பல அடி உயரத்தில் சென்று கொண்டிருக்கும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் பிசகினாலும் இருவரின் எலும்பு கூட கிடைக்காது என்று தெரிந்தும் ரிஸ்க் எடுத்து இந்த புகைப்படம் எடுக்க இந்த காதல் ஜோடி போஸ் கொடுத்துள்ளதை ஒருசிலர் பாராட்டினாலும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.