இலங்கை வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவு ஜூலை மாதம் தொடக்கம் வழங்கப்படும் என்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

‘2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற சகலருக்கும் புதிய கொடுப்பனவு கிடைக்கும்.

இதன்மூலம் 5 இலட்சத்து 80 ஆயிரம் பேர் வரை நன்மை பெறுவார்கள். ஓய்வூதிய கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக அரசு ஒவ்வொரு மாதமும் ஆயிரத்து 600 கோடி ரூபாவை செலவிடுகிறது. இனிவரும் மாதங்களில் ஆயிரத்து 700 கோடி ரூபா ஒதுக்கப்படும்’ என்றும் ஓய்வுதிய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.