யாழ்ப்பாணம் நகரில் வர்த்தகரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான ரோசான் தமீம் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக தயார்படுத்தி வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.நகரில் முக்கிய புள்ளி ஒருவர் கஞ்சா வியாபாரத்தில் கொடி கட்டிப்பறக்கிறார் என்று தகவல் அறிந்து கொழும்பு போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து அவரையும் சகாவையும் கைது செய்தனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு முன்பாக நேற்றிரவு 7 மணியளவில் வாகனத்தில் இருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாகனத்தைப் பரிசோதனை செய்த போது 40 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் ஒப்படைப்படைக்கப்பட்டனர்.