வாழைத்தோட்டம் பகுதியில் கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 13 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயின், 10 தோட்டக்கள் மற்றும் ஒரு வாள் என்பன கண்டிபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கொழும்பு ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மத்திய கொழும்பு ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.