அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் இன்று பலம் வாய்ந்த நியூசிலாந்துடன் மல்லுகட்டுகிறது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டி விட்டது. பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

2 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளியுடன் உள்ள பாகிஸ்தான் அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஒன்றில் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற வேண்டியது தான். முந்தைய ஆட்டத்தில் தென்னாபிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தானுக்கு புதுதெம்பு அளித்துள்ளது.

இவ்விரு அணிகளும் கடைசியாக சந்தித்த 14 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு பாகிஸ்தான் ஈடுகொடுக்குமா? அல்லது பணிந்து போகுமா? என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசம், முகமது ஹபீஸ், ஹரிஸ் சொகைல், இமாத் வசிம், சர்ப்ராஸ் அகமது (கப்டன்), வஹாப் ரியாஸ், ஷதப் கான், முகமது அமிர், ஷகீன் ஷா அப்ரிடி.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், கலின் முன்ரோ, வில்லியம்சன் (கப்டன்), ரொஸ் டெய்லர், ரொம் லதாம், ஜேம்ஸ் நீஷம், கலின் கிரான்ட்ஹோம், சன்ட்னெர், மேட் ஹென்றி, பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.