கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி

லொரி ஓட்டுநராக வேலை செய்து செய்து வருபவர் கமலக்கண்ணன். இவர் புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதுச்சேரி 100 அடி ரோட்டுக்கு அருகில் கழிவுநீர் வாய்க்காலில் சாக்கு மூட்டையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். லொரி ஓட்டுனரை பெரிதாக காசுக்கு ஆசைப்பட்டும் கொன்றிருக்க வாய்ப்பிருக்காது.

சொத்து, சொந்த விரோதம் போன்ற பிரச்சினைகளும் கமலக் கண்ணனுக்கு கிடையாது. அப்படியிருக்க அவராக போதையில் எங்காவது விழுந்திருந்தாலும் எப்படி சாக்கு மூட்டைக்குள் போயிருக்க முடியும்? எப்படி கமலக்கண்ணன் கொலை செய்யப்பட்டார் என்பது பற்றி இங்கே பார்க்கப் போகிறோம்.

பிரேதப் பரிசோதனை
கமலக்கண்ணன் பிணமாகக் கிடந்த தகவல் அறிந்ததும் அந்த சம்பவ இடத்துக்கு முதலியார் பேட்டை போலிஸ் உடனடியாக வந்து சேர்ந்தனர். சாக்கடையில் இருந்து மீட்ட உடலை உடனடியாக போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி சந்தேகம்
இது தொடர்பான தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறை சந்தேகத்தின் அடிப்படையில் கமலக் கண்ணனின் மனைவி ஸ்டெல்லாவிடமும் அவருடைய சகோதரியிடமும் விசாரணை மேற்கொண்டனர். இருவரும் மாறுபட்ட கருத்துக்களைக் கூறியதால் போலீசுக்குச் சந்தேகம் வலுக்கவே போலீசின் தீவிர விசாரணை வளையத்துக்குள் சிக்கினார் ஸ்டெல்லா.

போலீஸ் விசாரணை
தன்னுடைய கணவர் அதீத குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருந்தார். எப்போதும் குடித்துவிட்டு தான் வீட்டுக்கு வருவார். அதனால் நான் யாரிடம் செல்போனில் பேசினாலும் சந்தேகப்பட்டு அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார் என்று ஸ்டெல்லா கூறியிருக்கிறார். அதன்பின் தான் போலீஸ் விசாரணை மேலும் தீவிரமடைந்து வழக்கும் சூடுபிடிக்கத் தொடங்கியது.

குடும்பச் சண்டனை
இப்படியே அடிக்கடி நடந்து கொண்டிருந்ததால், கோபித்துக் கொண்டு தன்னுடைய அக்காவின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்திருக்கிறார் ஸ்டெல்லா. ஆனால் அவருடைய அக்காவின் வீட்டுக்கே தேடி வந்து அவரை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார் கமலக்கண்ணன்.

சதித்திட்டம்
அடி வாங்க உடம்பில் தெம்பில்லாமல் வாழ்க்கையையே வெறுத்துப் போய்விட்டது. அக்காவும் இதை இப்படியே எவ்வளவு நாள் தான் பொறுத்துக் கொண்டு வாழப் போகிறாய் என்று கேட்டார். அதன்பின்னர் இருவரும் சேர்ந்து என் கணவரைக் கொலை செய்து விடலாம் என்று திட்டம் தீட்டினோம்.

பழச்சாறு
பழச்சாறில் ரோஜா செடிகளுக்குப் போடும் பூச்சிக்கொல்லி விஷம் வைத்து ஆளைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம். அப்படியே பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்தும் கமலக்கண்ணனின் உயிர் பிரியவில்லை. அதனால் அருகில் இருந்த ஒரு ஆண் நண்பரை வரவழைத்து வேறு ஒரு திட்டம் தீட்டினோம்.

ரௌடி ஏற்பாடு
அந்த திட்டத்தின் படி, அந்த ஏரியாவில் உள்ள ஒரு ரௌடியை வரவழைத்தோம். வந்ததும் நானும் எனது அக்காவும் என் கணவரின் கை மற்றும் கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டோம். அந்த ரௌடி என் கணவரின் வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு, கழுத்தை நெறித்துக் கொலை செய்தார் என்று தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சாக்கடையில் வீசப்பட்ட உடல்
பிறகு அன்று இரவு அந்த ரௌடி தன்னுடைய நண்பர்கள் சிலருடன் வந்து கமலக்கண்ணனின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துச் சென்று கழிவுநீர் வாய்க்காலில் வீசியிருக்கிறார். தன்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியதற்காக தன் அக்காவின் துணையோடு கணவனையே தீர்த்துக் கட்டிய மனைவியின் வாக்குமூலம் அந்த பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கமலக்கண்ணனும் ஸ்டெல்லாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.