கண்ணாடி அணிவது ஒரு பேஷன். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் அறிவாளி என்று ஒரு உணர்வும் மற்றவர்களுக்கு உண்டாகும். சிலர் தேவையான நேரத்தில் மட்டுமே கண்ணாடி அணிவர். ஆனால் வேறு சிலருக்கு எப்போதும் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்கும். கண்களில் பிரச்சனை வந்தாலும் சிலர் கண்ணாடி அணிய மாட்டார்கள். கண்ணாடி அணிய கஷ்டப்பட்டு கொண்டு லென்ஸ் போன்ற மாற்று தீர்வுகளுக்கு மாறுபவர்களும் நம்மிடையே உண்டு.

இப்படி கண்ணாடி அணியாமல் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு முக்கிய காரணம் கண்ணாடி அணிவதால் உண்டாகும் தழும்பு. கண்ணாடி வாங்குவதற்கு முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ஆனால், இப்போது தொடர்ந்து கண்ணாடி அணிவதால் மூக்கில் உண்டாகும் தழும்பைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகள் உள்ளன. இதனால் கண்ணாடி அணிந்தாலும் அதனை எடுத்து விட்டாலும் உங்கள் அழகைப் பாதுகாக்க முடியும்.

கண்ணாடி அணிவதால் மூக்கில் உண்டாகும் தழும்பைப் போக்க இதோ சில தீர்வுகள் உங்களுக்காக…

11 தீர்வுகள் நமது உடல் அழகில் பாதிப்பு ஏற்படுவது இயல்பான விஷயம் தான். ஆனால் அந்த பாதிப்பை சரி செய்யாமல் அப்படியே விடுவது சரியல்ல. நமது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இந்த அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும். அது இந்த கண்ணாடியால் உண்டாகும் தழும்பிற்கும் பொருந்தும். இந்த மூலப்பொருட்கள் கண்ணாடி அணிவதால் உண்டாகும் தழும்பைப் போக்குவதில் சக்தியோடு போராடி தழும்பைப் போக்குகிறது.

கண்ணாடித் தழும்பைப் போக்க இந்த மாஸ்க் தயாரிக்க ஒருங்கிணைத்த மூலப்பொருட்கள் கண்ணாடி தழும்பைப் போக்குவதில் உதவுகின்றன. உருளைக்கிழங்கில் உள்ள என்சைம்கள் கண்ணாடி தழும்பை லேசாக்குவதில் உதவுகின்றன.

தேவையான பொருட்கள் .
ஒரு ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு .
ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு .
2 ஸ்பூன் தக்காளி சாறு
செய்முறை
1. வெள்ளரிக்காய் சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
2. இந்த சாற்றில் உருளைக் கிழங்கு மற்றும் தக்காளி சாற்றை சேர்க்கவும்.
3. எல்லா சாற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
4. இந்த சாற்றில் ஒரு காட்டன் பஞ்சை முக்கி எடுக்கவும்.
5. அந்த பஞ்சை எடுத்து மூக்கில் உள்ள தழும்பில் தடவவும்.
6. இந்த சாறு முகத்தில் காயும் வரை அப்படியே விடவும்.
7. பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். எத்தனை முறை இதனை செய்ய வேண்டும்? ஒரு வாரம் தொடர்ந்து தினமும் இந்த முறையை பின்பற்றலாம். நிச்சயமாக தழும்பு மறைவதில் ஒரு நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும்.

கலவை பேக் மூக்கில் இருக்கும் விடாப்பிடித் தழும்பை போக்குவதில் இந்த கலவை நல்ல தீர்வைத் தருகிறது. தேன், புதினா சாறு போன்ற முக்கிய மூலப்பொருட்களைக் கொண்டிருக்கும் இந்த பேக், மூக்கில் உள்ள கண்ணாடித் தழும்பைப் போக்க சிறந்த வகையில் உதவுகிறது. சருமத்திற்கு பல நன்மைகளைத் தரும் பண்பு புதினாவில் உள்ளது.
தேவையான பொருட்கள்.
ஒரு ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு .
ஒரு ஸ்பூன் புதினா சாறு .
1/2 ஸ்பூன் எலுமிச்சை மற்றும் தக்காளி சாறு .
ஒரு ஸ்பூன் தேன்
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில் வெள்ளரிக்காய் சாறு எடுத்துக் கொள்ளவும்.
2. புதிதாகப் பறிக்கப் பட்ட புதினா இலைகளிலிருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
3. இந்த கிண்ணத்தில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
4. தக்காளி விழுது சிறிதளவு அந்த கிண்ணத்தில் சேர்க்கவும்.
5. கிளிசரின் மற்றும் தேன் ஆகிய இரண்டையும் கடைசியாக இந்த கலவையில் சேர்க்கவும்.
6. எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கரையும் வரை கலக்கவும்.
7. உறங்கச் செல்வதற்கு முன் இந்த கலவையை உங்கள் முகத்தில் கண்ணாடி தழும்பு இருக்கும் பகுதிகளில் தடவி விடவும்.
8. இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும்.
9. மறுநாள் காலை, முகத்தைக் கழுவவும். எத்தனை முறை இதனைச் செய்ய வேண்டும்? தினமும் இதனை பின்பற்றுவதால் விரைவில் கண்ணாடித் தழும்புகள் நீங்கும்.

பால் மாஸ்க்
பால் மாஸ்கை ஒரு இயற்கையான க்ளென்சர் என்று கூறலாம். பாலுக்கு தூய்மை படுத்தும் பண்புகள் உண்டு. பாலில் உள்ள லாக்டிக் அமிலம், கண்ணாடி அணிவதால் உண்டாகும் சரும நிற மாற்றத்தைப் போக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள் .
ஒரு ஸ்பூன் தேன் . ஒரு ஸ்பூன் ஓட்ஸ் .
ஒரு ஸ்பூன் பால்
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றிக் கொள்ளவும்.
2. அந்த கிண்ணத்தில் தேன் மற்றும் ஓட்ஸை சேர்க்கவும்.
3. இந்த கலவையை நன்றாகக் கலந்து தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவவும்.
4. அடுத்த 15 நிமிடங்கள் நன்றாக காய விடவும்.
5. பிறகு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். எத்தனை முறை இதனை செய்யலாம்? கண்ணாடியால் உண்டான தழும்புகள் மறையும் வரை இதனைப் பின்பற்றி வரவும்.

வெள்ளரிக்காய் மாஸ்க்
வெள்ளரிக்காய், பன்னீர், மற்றும் தயிர் ஆகியவற்றின் கலவை கண்ணாடித் தழும்புகளில் சிறப்பாக வேலை செய்து அதனைக் குறைக்க உதவுகிறது. தொடர்ச்சியாக இதனைப் பின்பற்றுவதால் நாளடைவில் முற்றிலும் இந்த தழும்புகள் மறைகிறது. இந்த மாஸ்கை தடவும்போது தயிர் பயன்படுத்துவதால் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்
1. 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு
2. ஒரு ஸ்பூன் தயிர்
3. ஒரு ஸ்பூன் பன்னீர்
செய்முறை
1. வெள்ளரிக்காயை நறுக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.
2. அந்த வெள்ளரிக்காய் சாற்றில் தயிர் சேர்க்கவும்.
3. பிறகு பன்னீர் சேர்க்கவும்.
4. இந்த கலவையை உங்கள் மூக்கில் தழும்பு இருக்கும் இடத்தில் தடவவும்.
5. பத்து நிமிடம் இந்த கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும்.
6. பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். எத்தனை முறை இதனை செய்யலாம்? ஒரு வாரம் தொடர்ந்து செய்து வருவதால் விரைவில் தழும்புகள் மறையும்.

ஆரஞ்சு தோல்
முகத்தை இயற்கையான முறையில் வெண்மையாக்க ஆரஞ்சு தோல் பயன்படுகிறது. இதன் சிறப்பை நம்மில் பலரும் அறிந்திருக்க முடியும். ஆரஞ்சு தோலுடன் இதர இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் ஏற்பட்டுள்ள கண்ணாடித் தழும்புகளைப் போக்க முடியும்.
தேவையான பொருட்கள் .
காய்ந்த ஆரஞ்சு தோல் .
ஒரு ஸ்பூன் பால் .
ஒரு ஸ்பூன் தேன் .
ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய்
செய்முறை
1. காய்ந்த ஆரஞ்சு தோலை எடுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
2. இந்த ஆரஞ்சு தூளுடன் பால் சேர்க்கவும்.
3. இந்த கலவையில் தேன், பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்க்கவும்.
4. இந்த கலவை ஒரு பேஸ்ட் ஆகும் வரை கலக்கவும்.
5. இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் கண்ணாடியால் உண்டான தழும்பில் தடவவும்.
6. 20 நிமிடங்கள் இந்த கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும்.
7. பிறகு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். எத்தனை முறை இதனை செய்யலாம்? தினமும் கண்ணாடி தழும்பு மறையும் வரை இதனைச் செய்து வரலாம்.

வினிகர் மற்றும் பன்னீர்
வினிகர் எதையும் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்ட ஒரு மூலப்பொருள். இந்தக் கலவையில் வினிகருடன் சேர்ந்து பன்னீரும் மூக்கில் உண்டான கருப்பு நிறத்தைப் போக்கி, கண்ணாடி அணிவதால் உண்டான தழும்பைப் போக்க உதவுகிறது. இதனால் உங்கள் முகம் அழகாகிறது.
தேவையான பொருட்கள் .
1/2 ஸ்பூன் வினிகர் .
1/2 ஸ்பூன் பன்னீர்
செய்முறை
1. வினிகர் மற்றும் பன்னீரை ஒன்றாகக் கலக்கவும்.
2. இந்த கலவையில் ஒரு காட்டன் பஞ்சை நனைக்கவும்.
3. பஞ்சை அந்த கலவையில் நனைத்து கண்ணாடித் தழும்பு இருக்கும் இடங்களில் தடவும்.
4. 15 நிமிடங்கள் காயவிடவும்.
5. பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். எத்தனை முறை இதனைச் செய்யலாம்? 7-10 நாட்கள் தொடர்ந்து இந்த முறையைப் பின்பற்றுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை மற்றும் பன்னீர்
சருமத்தில் எலுமிச்சை பயன்படுத்தி நாம் பெரும் நன்மைகள் ஏராளம். பல தழும்புகளையும் போக்கி சருமத்தை சுத்தம் செய்யும் பண்பு எலுமிச்சைக்கு உண்டு. இது பன்னீருடன் இணைந்து ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். தேவையான பொருட்கள் .
2 ஸ்பூன் எலுமிச்சை சாறு . பன்னீர் செய்முறை
1. எலுமிச்சைப் பழத்தில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
2. இந்த எலுமிச்சை சாற்றில் இரண்டு துளிகள் பன்னீர் சேர்க்கவும்.
3. இந்த கலவையில் ஒரு பஞ்சை நனைத்துக் கொள்ளவும்.
4. அந்த பஞ்சை எடுத்து கண்ணாடித் தழும்பு உள்ள இடத்தில் தடவவும்.
5. ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அப்படியே விடவும்.
6. பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். எத்தனை முறை இதனைச் செய்யலாம்? தினமும் இதனைப் பயன்படுத்துவதால் விரைவில் இந்த தழும்புகள் மறையும்

உருளைக்கிழங்கு துண்டுகள்
உருளைக்கிழங்கை நறுக்கி கண்ணாடித் தழும்புகள் உள்ள இடத்தில் அந்த துண்டுகளை வைத்து நன்றாகத் தேய்க்கவும். தினமும் தொடர்ந்து இதனைப் பயன்படுத்துவதால் அடுத்த சில நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும்.

தக்காளித் துண்டுகள்
ஒரு தக்காளியை எடுத்து நறுக்கிக் கொள்ளவும். இந்த தக்காளித் துண்டை எடுத்து கண்ணாடி தழும்பு இருக்கும் இடத்தில் மென்மையாகத் தடவி வரவும். விரைவில் உங்கள் முகத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். தினமும் தவறாமல் செய்து வரவும்.

வெள்ளரிக்காய் துண்டுகள்
வெள்ளரிக்காய் கண் தொடர்பான பிரச்சனைகளில் சிறப்பாக செயல்புரியும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைப்பதால் கண்களுக்கு அமைதி கிடைக்கிறது. மேலும் வெள்ளரிக்காய் கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளைப் போக்கவும் சிறப்பாக செயல்புரிகிறது.

கற்றாழை ஜெல்
கற்றாழை சாற்றை எடுத்து கண்ணாடியால் ஏற்பட்ட தழும்புகளில் தடவி வருவதால் தழும்புகள் விலகும். கற்றாழை ஜெல்லை எடுத்து தழும்பில் தடவி அரை மணி நேரம் அப்படியே விடவும். தினமும் இதனைச் செய்து வர தழும்புகள் மறையும்.

கண்ணாடி அணிவதற்கு சில குறிப்புகள் . அதிக எடையுள்ள கண்ணாடியை அணிவதைத் தவிர்க்கவும். இதனால் மூக்கில் அதிக தழும்பு வர வாய்ப்புள்ளது. . கண்ணாடி இறுக்கமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இறுக்கம் காரணமாகவும் தழும்புகள் தோன்றலாம். . தேவை ஏற்படும்போது மட்டும் கண்ணாடி அணியலாம். . நோஸ் பேடு பொருத்தப்பட்ட கண்ணாடியை தேர்ந்தெடுத்து அணியலாம்.