கர்நாடக மாநிலத்தில் கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்து விபத்து – 25பேர் பரிதாபச் சாவு

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் இன்று கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் இன்று மதியம் பாண்டவபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.

இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று கால்வாயில் தத்தளித்தவர்களை மீட்டுக் கரை சேர்த்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரைசேர்ந்தனர். நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கிய சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.