கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இரணைமடு விமாப்படை முகாமிற்கு சொந்தமான ஜீப் வண்டியும், இளைஞனின் மோட்டார்சைக்கிளும் மோதி இந்த விபத்து நேர்ந்தது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.