கிளிநொச்சி அறிவியல் நகர் பல்கலைகழகத்தில் பௌத்த விகாரை, தியான மண்டபம் என்பவற்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அறிவியல் நகரிலுள்ள யாழ். பல்கலையின் பொறியியல்,தொழில்நுட்ப பீடம் மற்றும் கிளிநொச்சி விவசாய பீடத்தில் தற்போது சுமார் 600 சிங்கள மாணவர்கள் கல்வி கற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் வழிபாட்டு வசதிக்காக விகாரை அமைக்க ஒரு ஏக்கர் நிலத்தை பல்கலைகழக நிர்வாகம் அறிவியல் நகர் வளாகத்தில் ஒதுக்கியிருந்தது.

சரசவி விஹாரையென்ற பெயரில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளிற்கு வெளிநாட்டு வாழ் சிங்களவர்களும் நிதியளித்து வருகிறார்கள்.