கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து மரணித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அன்னைசாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே இவ்வாறு மரணித்துள்ளார்.

மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பம், தந்தை நிரந்தர சுகயீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர், தாயின் உழைப்பில் வாழ்கின்ற குடும்பத்தில் டிலானி மூத்த பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

டிலானியின் இறுதி கிரிகைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் குடும்ப வறுமை காணப்படுகிறது. இவர்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்ற கொட்டில் ஒன்றில் வாழ்ந்து வருகின்றனர்.