குரங்கிற்கு பாலியல் தொல்லை : 25 வயதுப் பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை

எகிப்து நாட்டில் குரங்குக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது தொடர்பாக பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

எகிப்து நாட்டில் நைல் டெல்டா நகரில் செல்லப்பிராணிகளை விற்பனை செய்கிற கடைக்கு பஸ்மா என்ற 25 வயது பெண், கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஒரு நாள் சென்றிருந்தார்.

அங்கு அவர் ஒரு குரங்கைப் பார்த்து ரசித்து அதனுடன் விளையாடினார். அப்போது அவர் சிரித்தவாறே அந்த குரங்கின் பிறப்புறுப்பை சீண்டி, செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

இதை ஒருவர் ரகசியமாக செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 90 விநாடிகள் ஓடிய அந்த வீடியோ, அங்கு தீவிரமாக பரவியது.

அதைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். அவர் மீது மன்சூரா நகர நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பஸ்மா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது எனக் கூறி, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.