ஷேன் வட்சன், இம்ரன் தகிர் ஆகியோரது குழந்தையுடன் டோனி விளையாடி மகிழ்ந்தது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அஸ்வின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் முடிவடைந்ததும் சென்னை அணி வீரர்களான ஷேன் வட்சன், இம்ரன் தகிர் ஆகியோரது மகன்கள் மைதானத்தில் விளையாட்டாக தங்களுக்குள் ஓட்டப் பந்தயத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

இதனை அவர்களுக்குப் பின்னால் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தோனி சிறுவர்கள் இருவரும் ஓடுவதற்கு முன்னதாகவே அவர், ஓடத் தொடங்கிவிட்டார். தோனி பின்னோக்கியபடி ஓட சிறுவர்கள் இருவரும் அவரை துரத்தியபடி ஓடினர். பின்னர் இம்ரன் தகிர் மகனை தூக்கிக் கொண்டு தொடங்கிய இடத்துக்கு வந்து நின்றார் தோனி. பின்னர் வாட்சனின் மகன் திரும்பி ஓடிவரும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்த தோனி, அவன் வந்தவுடன் சிரித்துக் கொண்டே மைதானத்தில் வெளியேறினார்.

இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளளது. தற்போது இது வைரலாகி வருகிறது.