குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு காய்ச்சல் நிலை ஏற்பட்டால் தாமதியாது உடனடியாக அது தொடர்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்வது மிக முக்கியமானது என தேசிய டெங்கு தடுப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

தென் மேற்கு பருவப்பெயர்ச்சி மழைக்காலநிலையை அடுத்து ஏழு மாவட்டங்களில் டெங்கு நுளம்பு அதிகரிக்கும் இடர் மாவட்டங்களாக தேசிய டெங்கு தடுப்பு பிரவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி ,மாத்தறை, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்கள் தற்பொழுது டெங்கு இடர் அதிகம் உள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாகவே தேசிய டெங்கு தடுப்பு பிரவு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால் உரிய மருத்துவரிடம் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிரத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு குடிதண்ணீரை அருந்த வேண்டும் என்றும் தேசிய டெங்கு தடுப்பு பிரவு சுட்டிக்காட்டியுள்ளது.