கொழும்பில் தேங்கியுள்ள 1000 மெட்ரிக் தொன் குப்பை!

கொழும்பில் சுமார் 1000 மெட்ரிக் தொன் குப்பைகள் அகற்றப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் சேகரிக்கப்பட்ட குப்பைகளில் பாதியளவானவற்றை புத்தளம் அருவக்காடு குப்பை மேட்டில் கொட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

20 டிப்பர்களை அனுப்பினால் கிட்டத்தட்ட 20 இலட்சம் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாகவும், செலவை குறைக்க என்ன செய்யலாமென ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.