கொழும்பில் நடைபெற்று வந்த 2ஆவது டெஸ்டில் இலங்கை 199 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாபிரிக்காவை வெள்ளையடிப்பு செய்துள்ளது.

இலங்கை – தென்னாபிரிக்கா இடையிலான 2ஆவது டெஸ்ட் கடந்த 20ஆம் திகதி கொழும்பு தொடங்கியது. டொஸ் வென்று துடுப்பாட்டம் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 338 ஓட்டங்கள் குவித்தது. மகாராஜ் 9 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 124 ஓட்டங்களில் சுருண்டது. தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளும், அகிலா தனஞ்ஜெயா 5 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 214 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

ஒட்டுமொத்தமாக 489 ஓட்டங்கள் முன்னிலை பெற்றதால், தென்னாபிரிக்கா அணியின் வெற்றிக்கு 490 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது.

இமாலய ஓட்டத்தை எட்டும் செய்யும் நோக்கத்தில் தென்னாபிரிக்கா 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கியது. நேற்றைய 3 ஆவது நாள் ஆட்ட முடிவில் தென்னாபிரிக்கா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டி ப்ரூயின் 45 ஓட்டங்களுடனும், பவுமா 14 ஓட்டங்களுடனும்; களத்தில் இருந்தனர்.

இன்னும் ஐந்து விக்கெட்டுக்கள் மட்டுமே கைவசம் இருந்ததால், 4 ஆவது நாள் ஆட்டத்தில் விரைவில் முழு ஆட்டமிழப்பு ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்றைய 4 ஆவது நாள் ஆட்டம் தொடங்கியதும் ப்ரூயின், பவுமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ப்ரூயின் அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடி ஹெராத், தில்ருவான் பெரேரா, தனஞ்ஜெயா சுழற்பந்தை நேர்த்தியாக எதிர்கொண்டது. இதனால் இலங்கை வீரர்கள் விரக்தியடைந்தது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் இந்த ஜோடி பிரிந்தது.

பவுமா 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி கொக் 8 ஓட்டங்களில் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேறினார். அத்துடன் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. 7 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இலங்கை வெற்றியை நோக்கிச் சென்றது.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய டி ப்ரூயின் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரபாடா 18 ஓட்டங்களுடனும், ஸ்டெய்ன் 6 ஓட்டங்களுடனும் வெளியேற தென்னாபிரிக்கா 2ஆவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்கள் எடுத்து இலங்கையின் பந்து வீச்சில் சுருண்டது.

இதனால் தென்ஆப்பிரிக்கா 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெராத் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. இலங்கை தொடக்க பேட்ஸ்மேன் கருணாரத்னே ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published.

error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது