கோட்டாபாய போட்டியிடுவதால் வடக்கு, கிழக்கு தமிழர்கள் மகிழ்ச்சியில் – கருணா அம்மானின் கண்டுபிடிப்பு

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடும் அறிவிப்பால் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்.

நேற்று (2) நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் அச்சமடைந்திருந்த வடக்கு, கிழக்கு மக்கள், கோட்டாபய போட்டியிடும் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதனால்தான் வடக்கு கிழக்கில் வெடிகொளுத்தினார்கள்.

நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளிப்பவரிற்கே வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.