இலங்கைப் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டிருப்பது, ஆபத்தானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் நாடு அபிவிருத்தியடையும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் அதிகாரத்துக்கு வந்தால், நாடு முற்றாக நாசமாகி விடும் என்றே தான் அச்சம் கொண்டுள்ளேன் எனவும், சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டார்.