சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தலவாக்கலையில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலையிலுள்ள அவரது சிகிச்சை நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைதானவர் சாய்ந்தமருதை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் ஆவார். கடந்த ஒரு வருடமாக அங்கு சிகிச்சை நிலையம் நடத்தி வந்துள்ளார்.

வைத்தியசாலையில் கருக்கலைப்பு நடப்பதாக அங்கு பணியாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவர், லிந்துலை நகரசபை தலைவரிற்கு தகவல் வழங்கியிருந்தார். அந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, வைத்தியர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணையின்போது, அவர் தனது எம்.பி.பி.எஸ் வைத்திய தகைமையை உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் அவர் போலி வைத்தியராக இருக்கலாமென்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அவரது சிகிச்சை நிலையத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான மருந்துகள், ஊசிகள் கைப்பற்றப்பட்டன.

இன்று அவர் நுவரெலியா நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.