கேகாலையில் இடம்பெற்ற தேசிய சதுரங்கப்போட்டியில் யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

St.Josep College உடைய 110வது ஆண்டுநிறைவை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டி மார்ச் 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் தொடர்ந்தது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளிலிருந்து 6 மாணவர் குழுக்கள் போட்டியிட்டன.

சி.சிவதனுஜனை தலைமையாகக்கொண்டு விளையாடிய கொக்குவில் இந்து U20 அணி 5போட்டிகளை எதிர்கொண்டு சம்பியனாகியுள்ளனர். மேலும் U15 அணியினர் 4வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் உட்பட பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இது குறித்து கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கையில்..
“மாணவர்கள் தமது கடின முயற்சியின் மூலமே வெற்றி பெற்றுள்ளனர். ஆசிரியர்களின் உதவியும் தனிப்பட்ட பயிற்சியும் அவர்களை மேலும் பல சாதனைகள் புரிய வழி வகுக்கும்.  ”

அணித்தலைவர்
“நாம் கல்வியிலும் விளையாட்டிலும் சம அளவு பங்களிப்பைச் செய்து வருகின்றோம். தொடர்ந்து பல போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்று வருகின்றோம். தொடர்ந்து இவ்வாறான போட்டிகளில் பங்குபற்றி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பதே எங்கள் குறிக்கோள்.”

இவர்கள் கடந்த வருடம்  மும்பையில் நடைபெற்ற பதினொராவது சர்வதேச மேயர் கப் சதுரங்கப்போட்டியில் (11th mayor’s cup FIDE Rating open category)  சாதித்தமையும் குறிப்பிடத்தக்கது.