சம்சுங் கலக்ஸி எஸ்10 வெளியீட்டுத்திகதி மற்றும் மிரள வைக்கும் அம்சங்கள் வெளியாகியுள்ளன.

சம்சுங் நிறுவனத்தின் கலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் புதிய கலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், கலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் வெளியீடு, ஸ்டோரேஜ் விவரம், ஸ்கிரீன் அளவுகள், சில அம்சங்கள் மற்றும் லண்டன் விலை உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

அதன்படி கலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2019 மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன், அதாவது பிப்ரவரி 20ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தற்சமயம் லீக் ஆகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு அதே நாளில் துவங்கி, மார்ச் 8ம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

கலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்கள்: வழக்கமான மாடல், பிளஸ் மற்றும் ஃபிளாட் என மூன்று வித வேரியன்ட்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இவற்றில் வழக்கமான 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படும் என்றும் கலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ போன்றே கலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனிலும் மற்ற சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் நீக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்கிரீன் அளவுகளை பொருத்த வரை கேலக்ஸி எஸ்10 மாடலில் 6.1 இன்ச், கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் 6.4 இன்ச் மற்றும் ஃபிளாட் வெர்ஷனில் 5.8 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான கேலக்ஸி எஸ்10 ஃபிளாட் வெர்ஷனில் 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என்றும் இதன் விலை 669 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.60,730) என தெரிகிறது.

இதேபோன்று 6.1 இன்ச் ஸ்கிரீன் கொண்ட கேலக்ஸி எஸ்10 வழக்கமான வளைந்த எடிஷன் 128 ஜி.பி. அல்லது 512 ஜி.பி. என இருவித ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. இவற்றின் விலை முறையே 799 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.72,517) என்றும் 999 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.90,668) என கூறப்படுகிறது.