செயற்கையாக பல்வேறு தொழில்நுட்பங்களையும், நவீன வளர்ச்சிகளையும், மனிதன் உருவாக்கினாலும், இயற்கையின் முன்னால் அவை அனைத்தும் தோற்றுவிடுகின்றன. அந்த வகையில் இதுவரை பல ஆச்சரியமான இயற்கை நிகழ்வுகளுக்கு ஆராய்ச்சியாளர்களால் கூட விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபோல்… பல ஆராய்ச்சியாளர்களுக்கு சவால் விடும் வகையில், இருந்து வருகிறது இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயரின் என்னும் உள்ள கிணறு. இந்த கிணற்றில் எந்த ஒரு பொருளை போட்டாலும், அது கல்லாக மாறி விடுகிறது.

இது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்ட போதிலும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கிணற்றை பார்ப்பதற்காகவே பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கிலாந்துக்கு வருகின்றனர்.

பலர் இந்த அதிசய நிகழ்வை காண்பதற்காக ஒரு வாரம் தங்கி, ஒரு பொருளை கிணற்றில் போட்டு விட்டு அது கல்லாக மாறுவதை பார்க்கின்றனர். இதனால் இந்த கிணற்றை சுற்றிலும் பொம்மை கிரிக்கெட் பேட், உள்ளிட்ட பல பொருள்களைக் காண முடிகிறது.

பொம்மைகள் தான் அதிகமாக இந்த கிணற்றில் போடப்படுகின்றன. மேலும் சிலர் இந்தக் கிணற்றில் கடவுள் குடியிருப்பதாகவும், ஒருசிலர் ஆவிகள் குடியிருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் இந்த நிகழ்வு மட்டும் எப்படி நிகழ்கிறது எனதெரியவில்லை.