சாவகச்சேரி -கோவிற்குடியிருப்பு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின் போது வீடொன்றில் இருந்து இராணுவச் சீருடை, தொப்பி, ரீசேட், இராணுவச் சின்னம் மற்றும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடாத்திய தேடுதலின் போதே இராணுவச் சீருடை மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும் முஸ்லிம் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் சனிக்கிழமை மாலை சாவகச்சேரி -கனகம்புளியடிச் சந்தியில் வோக்கி டோக்கியுடன் ஒருவரைக் கைது செய்ததுடன் ,அவர் பயணித்த காரினையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கோனார தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.