சின்னப்பிள்ளைத் தனமாக நடந்துகொள்ளாதீர்கள் – சபை உறுப்பினர்களுக்கு முதல்வர் அறிவுரை

யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்கள் தமது மான்பைப் பாதுகாக்கவேண்டும். பாடசாலைப்பிள்ளைப் போல சிலர் நடந்து கொள்கின்றீர்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபையின் மாதாந்த அமர்வு சபையில் முதல்வர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதன் போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

மக்களுக்கு சேவையாற்றுவதற்காக நாங்கள் அனைவரும் சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளோம்.  ஆனால் இங்கு சம்பந்தம் இல்லாத விடயம் ஒன்றுக்கு நாம் ஒருவருடன் சண்டை பிடிக்கின்றோம். உங்கள் மாண்பை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.