யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மதுபான நிலையத்துக்கு அருகே சகோதரர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

8 பேர் கொண்ட குழு ஒன்று வாள்கள், பொல்லுகளுடன் வந்து தாக்குதல் நடத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அரியாலை, முள்ளி வீதியை சேர்ந்த இரு சகோதர்களே தாக்குதலுக்குள்ளாகிக் காயமடைந்துள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாகே சகோதரர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கும் பொலிஸார், அவர் இருவர் மீதும் மணல் கடத்தல் குற்றச்சாட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.Leave a Reply

Your email address will not be published.