பேராண்மை, கபாலி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை தன்ஷிகா. தற்போது விஜய் சேதுபதி உடன் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் கூறியதாவது:

நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணமும் சந்தோஷமாக இருப்பதற்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தான் காரணம், என்பதை சுதந்திர தினத்தன்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். பல தியாகங்களைச் செய்து அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறைக்காக நமது நாட்டை நல்ல முறையில் கொடுக்க வேண்டும்.

நம்மை சுற்றியிருக்கும் மக்களுக்கும், சமுதாயத்திற்கும் உங்களால் இயன்ற அளவு செயலாற்றுங்கள். நம்முடைய சிறு பங்களிப்பும் நம்முடைய சுற்று வட்டாரத்தின் மாற்றத்திற்கு பெரிதும் உதவும். இதுவே சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அமையும் என தெரிவித்துள்ளார்.