‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 29ந்தேதி இந்தப் படம் ரிலீசாக இருக்கிறது. இந்த படம் பற்றி ரம்யா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் “என் வாழ்க்கையிலேயே இத்தனை டேக்குகள் வாங்கியது இல்லை. இதன்பிறகும் இத்தனை டேக்குகள் வாங்குவேனா என்று தெரியாது.

முதலில் தியாகராஜன் குமாரராஜா என்னைச் சந்திக்க பெங்களூரு வந்தார். அப்போது நான் மிகவும் கூலாக, ‘என்னுடைய முதல் ஷாட் எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டும்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘கண்டிப்பாக, முயற்சி செய்யலாம்…’ என்று கூறினார்.

முதல் ஷாட் 37 டேக்குகள் எடுக்கப்பட்டது. விஜய் சேதுபதி தனக்கு 80 டேக்குகள் தேவைப்பட்டது என்று கூறினார். அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்று மாலை என்னுடைய ஷூட்டிங் தொடங்கியபோதுதான் அவர் கூறிய 80 டேக்குகள் பற்றி புரிந்தது”. இவ்வாறு அவர் கூறினார்.