சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள NGK படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். கடந்த தீபாவளிக்கே சர்காருடன் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கடந்த ஆண்டு நடந்த தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்ததால் பொங்கலுக்கும் வெளிவரவாமல் வருகிற மே 31ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு சூர்யாவின் படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இப்படத்திற்கு காத்திருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி அனைத்து மக்களையும் ஈர்த்ததை தொடர்ந்து வருகிற 12ஆம் தேதி யுவனின் இசையில் இப்படத்தின் பெர்ஸ்ட்  சிங்கிள் ட்ராக் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.